Posts
பிற்கால சோழர்கால நெடுசாலை -
- Get link
- X
- Other Apps
நெடுசாலை: சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த ஊர் நெடுசாலை ஆகும். இவ்வூர் சோழ மன்னன் ராஜமகேந்கிரன் காலத்தில் கூடுமுக்கி என்று அழைக்கப்பட்டது. மூன்று ஆறுகள் இங்கு கூடுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் கூடுமுக்கி நிகளங்கீஸ்வரமுடைய நாயனார் என்றழைக்கப்பட்டது. பின்னர் நெடுந்தேவ நாயனார் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலில் மொத்தம் 12 கல்வெட்டுகள் உள்ளன. இதில் 6 கல்வெட்டுகள் பூர்வாதராயர்களின் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளில் இவர்களுக்குமேல் அரசாண்ட சோழர் அல்லது போசள மன்னர்களின் பெயர்கள் எதுவுமில்லாமல் இருப்பதால் அக்காலத்தில் இவர்கள் இப்பகுதியை தனித்தே ஆண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இக்கோயிலில் 3 அடி உயர ஆனந்த தாண்டவத்தில் உள்ள நடராசர் செப்புப்படிமம் புகழ் பெற்றதாகும். தன் வலது காலை முயலகன்மீது ஊன்றி இடது காலை குறுக்கே தூக்கி 4 கரங்களுடன் தன் வலது கரத்தில் அபயம் காட்டி தன் இடது கையை கஜ ஹஸ்தமாய் தூக்கிய திருவடியை சுட்டுவதாக வீசி, வலது இடது மேற்கரங்களில் முறையே உடுக்கை மற்றும் தீச்சுடரை ஏந்தியவாறு குமிழ் சிரிப்புடன் நடனமாடுகிறார். சிவகாமி, உமாசகிதர், சண்டிகேஸ...