அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி
தொகரப்பள்ளி நடுகல்தொகுப்பு வீரத்தை போற்றும் நடுகல் தொகுப்பு 13 ஆம் நூற்றாண்டு மார்கழி 27 ஆம் தேதி புதுபற்று நாட்டு துவறப்பள்ளி ( தொகரப்பள்ளி ) மீது அதியமானார் போர்தொடுத்து வந்த போது ஊரைக்காக்க அவருடன் போரிட்டு பேரகடை ஏகாம்பரன், கும்பேரகடை ,வேள்முத்தரையன் சேவகர் மணியன் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது .மொத்தம் 10 பேர் இந்த பூசலில் இறந்து அவர்களுக்காக சானாரப்பன் மலையடிவாரத்தில் நடுகல் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இன்று வரை மார்கழி 27ல் இவ்வீரர்களை வழிபட்டு வருவது மட்டுமின்றி மலை உச்சியில் விளக்கும் ஏற்றப்படுகிறது . மேலும் விரவரங்களுக்க ு https://www.khrdt.in/krishnagiri/thogarapalli இரண்டு வீரர்கள் போரிடும் காட்சி ஒருவர் ஈட்டி மற்றொருவர் வில் வைத்தும் போரிடுகிறார்கள் ஈட்டி வைத்துள்ளவனின் உடலில் அம்பு பாய்ந்து அதனால் இறந்திருக்கலாம் ,மேற்பகுதியில் அவனும் அவனுடைய மனைவியும் சிவலோகம் செல்வதாக காட்சியை அமைத்திருக்கிறார்கள் .மேல் பக்கம் இவனுடைய மனைவி உடன்கட்டை ஏறி இருவரும் சிவலோகத்தில் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இதனுடைய கல்வெட்டு கீழே கொடுக்கப்பட்...
Comments
Post a Comment