பிற்கால சோழர்கால நெடுசாலை -
நெடுசாலை:
சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த ஊர் நெடுசாலை ஆகும். இவ்வூர் சோழ மன்னன் ராஜமகேந்கிரன் காலத்தில் கூடுமுக்கி என்று அழைக்கப்பட்டது. மூன்று ஆறுகள் இங்கு கூடுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் கூடுமுக்கி நிகளங்கீஸ்வரமுடைய நாயனார் என்றழைக்கப்பட்டது. பின்னர் நெடுந்தேவ நாயனார் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலில் மொத்தம் 12 கல்வெட்டுகள் உள்ளன. இதில் 6 கல்வெட்டுகள் பூர்வாதராயர்களின் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளில் இவர்களுக்குமேல் அரசாண்ட சோழர் அல்லது போசள மன்னர்களின் பெயர்கள் எதுவுமில்லாமல் இருப்பதால் அக்காலத்தில் இவர்கள் இப்பகுதியை தனித்தே ஆண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இக்கோயிலில் 3 அடி உயர ஆனந்த தாண்டவத்தில் உள்ள நடராசர் செப்புப்படிமம் புகழ் பெற்றதாகும். தன் வலது காலை முயலகன்மீது ஊன்றி இடது காலை குறுக்கே தூக்கி 4 கரங்களுடன் தன் வலது கரத்தில் அபயம் காட்டி தன் இடது கையை கஜ ஹஸ்தமாய் தூக்கிய திருவடியை சுட்டுவதாக வீசி, வலது இடது மேற்கரங்களில் முறையே உடுக்கை மற்றும் தீச்சுடரை ஏந்தியவாறு குமிழ் சிரிப்புடன் நடனமாடுகிறார். சிவகாமி, உமாசகிதர், சண்டிகேஸ்வரர் மற்றும் நால்வர் படிமங்களும் உள்ளன.13ம் நூற்றாண்டை சேர்ந்த வேலைப்பாடு மிக்க பைரவர் சிற்பம் ஒன்று மட்டும் அக்கோயிலின் பழமையைப் பாதுகாத்து நிற்கிறது. இக்கோயிலின் கருவரையும் வழக்கத்தைவிடப் பெரியதாகும்.
அரிதான சோமாஸ்கந்தர்
700 ஆண்டுகள் பழமையான பைரவர்
பிற்கால சோழர்களின் 13 ஆம் நூற்றாண்டு நெடுசாலை பைரவர் - பார்க்க முடியாத சிகை அலங்காரத்துடன். இந்த கலை பொக்கிஷத்தை பாதுகாத்து பத்திரப்படுத்தியதற்கு திரு ராஜேந்திர வர்மா அவர்களுக்கு மிகுந்த நன்றி
நன்றி -திரு.M. ராஜேந்திர வர்மா வக்கீல் (B.K.P.M)
https://youtu.be/msjoEbrUnK0
நிகளங்கீச்சுர நாயனார்க்குத் -13 ஆம் நூற்றாண்டின் நெடுசாலை கல்வெட்டுகள் -திரிபுவன மல்ல பூர்வாதராயன் ஒரு ஊரை தானமாக கொடுத்த கல்வெட்டு
நன்றி -திரு.M. ராஜேந்திர வர்மா(B.K.B.M)
#கிருஷ்ணகிரிமாவட்டகல்வெட்டுகள்
#கிருஷ்ணகிரிமாவட்டம்
#கிருஷ்ணகிரிவரலாறு
https://youtu.be/EFVJEe7lVYI
13 ஆம் நூற்றாண்டின் நெடுசாலை கல்வெட்டுகள் -திரிபுவன மல்ல பூர்வாதராயன் காலத்தில் நெடுந்தேவருக்கு ஏரியை தானமாக கொடுத்த கல்வெட்டு
நன்றி -திரு.M. ராஜேந்திர வர்மா வக்கீல் (B.K.P.M)
#கிருஷ்ணகிரிமாவட்டகல்வெட்டுகள்
#கிருஷ்ணகிரிமாவட்டம்
#கிருஷ்ணகிரிவரலாறு
https://youtu.be/K-8tUWN024U
தமிழக தொல்லியல் துறையால் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மொத்தம் 11
https://maps.app.goo.gl/oQBordtcjduyAQhJ9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு

























Comments
Post a Comment