சாமந்தமலை -பெருங்கற்கால குத்துக்கல் Megalith - menhir
இரும்புக்கால கலாச்சார மக்கள் இறந்தோரின் ஆவி அழிவதில்லை என்பதில் நம்பிக்கைக் கொண்டோராய் இருந்ததால் பெருங்கற்களைக் கொண்டு இறந்தோருக்கு நினைவுச் சின்னங்களை உருவாக்கினர். அச்சின்னங்களில் இறந்தோரின் ஆவி தங்குவதாக நம்பினர். கல் திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம், கற்குவை, குத்துக்கல் ஆகிய பெருங்கற்படைச் சின்னங்கள் தமிழகத்தில் உள்ளன. முதுமக்கள் தாழி மற்றும் சுடுமண் ஈமப்பேழை ஆகியவையும் மண்ணால் ஆனவையாய் இருந்தாலும், அவையும் இரும்புக் காலத்தில் இறந்த மக்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டதால் பெருங்கற்படைச் சின்னங்களாகவே கொள்ளப்படுகின்றன. பிற அனைத்து வகைகளும் ஆவணப்படுத்தப்பட்டு குத்துக்கல் வகை மட்டும் கிருஷ்ணகிரியில் இல்லாமல் இருந்த நிலையில் சாமந்தமலையில் அண்மையில் இக்குத்துக்கல் வகைக் கண்டறியப்பட்டது. எனவே இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் குத்துக்கல் என்னும் பெருமையைப் பெறுகிறது. குத்துக்கல் (Menhir) என்பது சுமார் 15 அடி உயரத்தில் அடி பெருத்து முனை சிறுத்து காணப்படும் கல்லாகும். இறந்தோரின் நினைவாக தற்போதும் இறந்தோர் புதைக்கப்பட்ட சவக்குழியின் தலைப்பகுதியில் ஒரு கல்லை நடும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிவந்த குத்துக்கல் எழுப்பும் வழக்கத்தின் தொடர்ச்சியே ஆகும். சாமந்தமலை குத்துக்கல் விசிறிப்பாறை வகையை சேர்ந்ததாகும். இது சுமார் 4 மீ உயரமும் 2 மீ அகலமும் 20 செ.மீ தடிமனுடன் . அதன் மேல் பகுதி திருவண்ணாமலை மாவட்டம் த.மோட்டூரில் உள்ள விசிறிப்பாறையில் உள்ளது போன்ற இறக்கைகள் வடிவமைக்க முயற்சி செய்யப்பட்டு, அது முழுமைப் பெறவில்லை. இக்கல்லில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இதேப் போன்றதொரு விசிறிப்பாறை உள்ளது. ஆனால் இக்கல் உடைந்து ஒரு துண்டு மட்டும் நிற்கிறது. இரண்டும் தெற்கு வடக்கு என்ற நேர்கோட்டில் அமைந்துள்ளது. இரண்டும் இரு தலைவர்களின் நினைவாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட குத்துக்கற்களாகும். இடைப்பட்ட பகுதியில் பிற வகை பெருங்கற்படைச் சின்னங்கள் இருந்து அழிந்துப் பட்டிருக்கவேண்டும். தற்போது இவை இரண்டு மட்டுமே எஞ்சி நின்று இம்மாவட்ட குத்துக்கல் வகைக்கு சான்றாய் விளங்கிக் கொண்டிருக்கின்றன
https://jsrkrishnaji.blogspot.com/2019/10/museum-history-of-krishnagiri.html
சாமந்தமலை குத்துக் கற்கள்
நெடுநிலைகள் அல்லது குத்துக்கல் எனப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பல குத்துகற்களும் மற்றும் கற்பதுக்கையுடன் கூடிய குத்துக்கற்களும் கண்டறியப்பட்டுள்ளது. ஆணல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாறான குத்துகற்கள் இது நாள் வரை கண்டறியப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரால் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டத்தில் உள்ள சாமந்த மலை என்னும் சிற்றூரில் இரண்டு குத்துகற்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சாமந்தமலை என்னும் சிற்றூர் கிருஷ்ணகிரிக்கு வடகிழக்கே சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள பாரத கோயிலுக்கு வடக்கே சுமார் 200 மீ தொலைவில் ஓர் மிக பெரிய குத்துக் கல் காணப்படுகின்றது. மேலும் இரண்டாவது நடுகல் முதல் குத்துக்கல்லுக்கு மேற்கே சுமார் 200 மீ தொலைவில் இரண்டாவது குத்துக்கல் காணப்படுகின்றது. இவ்விரு குத்துக்கற்களையும் இவ்வூர் மக்களால் பண்டைய காலங்களில் யானை கட்டும் கல் என கூறுகின்றனர்
முதல் குத்துகல் சுமார் 4 மீ உயரமும் 2 மீ அகலமும் 20 செ.மீ தடிமனுடன் கோவிந்தராஜ் நாயுடு என்பவரின் வயலில் காணப்படுகின்றது. மோட்டூரில் காணப்படும் தய்தெய்வ குத்துகள் போன்று காணப்பட்டாலும் இதில் மோட்டூரில் காணப்படுவதை போன்று தலை மற்றும் கைகள் காணப்படவில்லை. இக்குத்துகல்லில் எவ்விதமான உருவ அமைதியும் காணப்படவில்லை. மாறாக உருவ அமைதி செய்வதற்க்கு முன் உள்ள சாதரண கல் போன்ற அமைப்பில் காணப்படுகின்றது. மேலும் இத்தட்டையா பகுதியானது கிழக்கு நோக்கி காணப்படுகின்றது. இக்கல்லுக்கு ஆண்டு தோறும் இந்நில உரிமையாளர்களால் வழிப்பாடு நடத்தப்பட்டு வருகின்றது.
இரண்டாவது நடுகல் சுமார் 4.5 மீ உயரமும் 1 மீ அகலமும் 25 செ.மீ தடிமனுடன் காணப்படும் இக்குத்துகல் முனுசாமி நாயுடு என்பவரின் வயலில் காணப்படுகின்றது. இக்குத்துகள் அகலத்தில் சற்று சிறியதாக காணப்பட்டலும் செவ்வக வடிவில் மேலிருந்து கீழ் வரை ஒரே அகலத்தில் காணப்படுகின்றது. மேலும் தடிமனானது மேல் பகுதியில் 5 செ.மீ தொடங்கி கீழ் வரும் போது சுமார் 25 செ.மீ தடிமான காணப்படுகின்றது. இக்கல் கொடுமணலில் கற்பதுக்கையுடன் காணப்படும் குத்துகல்லை போன்று காணப்படுகின்றது. மேலும் ஆண்டு தோறும் இக்கல்லுக்கும் இந்நில உடமையாளர்களால் வழிப்பாடு நடத்தப்பட்டு வருகின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருங்கற்காலத்தினை சார்ந்த அனைத்து வகையான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றது. ஆனால இது நாள் வரை குத்துக்கற்கள் பெருமளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கண்டறியப்படவில்லை. இவ்விரண்டு குத்துகற்களும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றில் மிக இன்றிியமையாத இடத்தினை பெறுகின்றன.
-------------------------
3000 ஆண்டுகள் #பழமையான #கிருஷ்ணகிரிமாவட்டத்தின் மிகப்பெரிய #குத்துக்கல் #சாமந்தமலை 4 மீட்டர் உயரமும் 5 மீட்டர் அகலமும் 20 செ.மீ தடிமனும் கொண்டதாக உள்ளது இது நமது மாவட்டத்தின் மிகபெரிய குத்துக்கல்லாகும் #கிருஷ்ணகிரி வரலாறு #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும் ஆவணப்படுத்தும்குழு #அருங்காட்சியகம் #தொல்லியல் #Menhir from #Megalithic period found (2019) in #Krishnagiri #Samanthamali #கிருஷ்ணகிரிமாவட்டம் #khrdt
https://youtu.be/ivARxh1UQWo
சாமந்தமலை குத்துககல் - கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே மிகப்பெரிய குத்துக்கல்
https://youtu.be/ACh8Tz4K1x8
12.57844, 78.19620
https://maps.app.goo.gl/q34gaLD3Vh4RbjVA7















Comments
Post a Comment