அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி
தொகரப்பள்ளி நடுகல்தொகுப்பு
வீரத்தை போற்றும் நடுகல் தொகுப்பு 13 ஆம் நூற்றாண்டு மார்கழி 27 ஆம் தேதி புதுபற்று நாட்டு துவறப்பள்ளி ( தொகரப்பள்ளி ) மீது அதியமானார் போர்தொடுத்து வந்த போது ஊரைக்காக்க அவருடன் போரிட்டு பேரகடை ஏகாம்பரன், கும்பேரகடை ,வேள்முத்தரையன் சேவகர் மணியன் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது .மொத்தம் 10 பேர் இந்த பூசலில் இறந்து அவர்களுக்காக சானாரப்பன் மலையடிவாரத்தில் நடுகல் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இன்று வரை மார்கழி 27ல் இவ்வீரர்களை வழிபட்டு வருவது மட்டுமின்றி மலை உச்சியில் விளக்கும் ஏற்றப்படுகிறது . மேலும் விரவரங்களுக்கு https://www.khrdt.in/krishnagiri/thogarapalli
இரண்டு வீரர்கள் போரிடும் காட்சி ஒருவர் ஈட்டி மற்றொருவர் வில் வைத்தும் போரிடுகிறார்கள் ஈட்டி வைத்துள்ளவனின் உடலில் அம்பு பாய்ந்து அதனால் இறந்திருக்கலாம் ,மேற்பகுதியில் அவனும் அவனுடைய மனைவியும் சிவலோகம் செல்வதாக காட்சியை அமைத்திருக்கிறார்கள் .மேல் பக்கம் இவனுடைய மனைவி உடன்கட்டை ஏறி இருவரும் சிவலோகத்தில் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இதனுடைய கல்வெட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ் அவர்கள் படித்தார்கள்
அடுத்தது
குதிரை மேல் அமர்ந்துள்ள இவன் ஒரு தலைவனாக இருக்க கூடும் ஏன் எனில் இரு பணியாளர்கள் அருகே நிற்கிறார்கள் ஒருவன் வெண்கொற்றகுடையுடன் காட்டப்பட்டுள்ளான்.இவன் ஒருவனை போரில் வீழ்த்தியுள்ளதை காட்டும் வகையில் குதிரையின் கால் அடியில் ஒருவீரன் வாள் கேடையத்துடன் காணப்படுகிறான்.
குதிரையில் அமர்ந்துள்ள தலைவன் எதிரில் உள்ள வீரனை ஈட்டி கொண்டு தாக்குகிறான் ,இவன் பெயர் பேரகடை ஏகாம்பரன் என்தாக கல்வெட்டு தெரிவிக்கிறது.
அதியமானோடு நடந்த போரில் சிறப்பாக போரிட்டு இறந்த காரணத்தால் இவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
( படம் பிரித்துககாட்டப்பட்டுள்ளது , இது போர்களக்காட்சி
இறந்த பின் சொர்கத்துககு செல்லும் காட்சி . இவரின் மனைவி உடன்கட்டை ஏறி இறக்கிறார் . அந்த நிகழ்வுக்கு செல்வதற்கு பெண்பணியாளர் ஒருவர் தட்டுசீர்வரிசையுடனும், மற்றொருவர் தலையில் குடத்துடனும் மற்றோர் பெண் சாமரம் (இருக்கலாம்) போன்ற ஒன்றினை எடுதது வரும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது.
நடுகல்லின் பக்கவாட்டில் இவன் சைவமதத்தினைச் சேர்ந்தவன் என்பதை குறிக்கும் வகையில் சிவலிங்கத்துடன் காட்டப்பட்டுள்ளான் .
அடுத்து
முதலில் உள்ள கல்வெட்டும் இதுவும் ஒன்று போல் இருந்தாலும் . கல்வெட்டு வேறு .இரண்டு வீரர்கள் போரிடும் காட்சி ஒருவர் ஈட்டி மற்றொருவர் வில் வைத்தும் போரிடுகிறார்கள் ஈட்டி வைத்துள்ளவனின் உடலில் அம்பு பாய்ந்து அதனால் இறந்திருக்கலாம் ,மேற்பகுதியில் அவனும் அவனுடைய மனைவியும் சிவலோகம் செல்வதாக காட்சியை அமைத்திருக்கிறார்கள் .மேல் பக்கம் இவனுடைய மனைவி உடன்கட்டை ஏறி இருவரும் சிவலோகத்தில் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இதனுடைய கல்வெட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ் அவர்கள் படித்து கூறியது
அடுத்த நடுகல் எண் 4
வீரத்தை தெளிவாக விளக்குகிறது இந்த நடுகல் தன் மார்பில் அம்பு தைப்பினும் அதை பொருட்படுத்தாது . எதிரியின் உடம்பில் ஈட்டியை எய்து தலையைபிடித்து தன் வாளை எடுக்கும் காட்சி அழகு . போரில் இவன் இறந்தபின் இவன் மனைவியும் உடன்கட்டை ஏறுகிறார் இது ஒரு சதிக்கல் வகையாகும்.
அடுத்த நடுகல் எண் 5
போர்களத்தில் போரிட கையில் வாளுடன் வேகமாக குதிரையை செலுத்தும் படி அமைத்திருக்கிறார்கள். இடையில் ஒரு குறுவாள் காட்டப்பட்டுக்கது .குதிரைப்படையை சேர்ந்த இந்த வீரன் போரில் இறந்த காரணத்தால் இவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நடுகல் எண் 6
இவன் போர் வீரன் போல் தெரியவில்லை
அடுத்த நடுகல் எண் 7
குதிரை வீரன் போருக்கு செல்லும் காட்சி ஒரு கையில் வாளை ஏந்தியிருக்கிறான். முதுகில் அம்புராதுணி காட்டப்படடுள்ளது ஒரு கையில் குதிரையை பிடித்துள்ளான். வில்லை அருகே காட்டியிருக்கிறார்கள் .இவன் தலைக்கு மேல் ஒரு கன்னட கல்வெட்டு காணப்படுகிறது.
ಹರ್ತಿಕಾರ ಮರುಡು
ஹர்திகார மருது
hartikara marudu
16th century
அடுத்த நடுகல் எண் 8
நின்று கொண்டிருக்கும் குதிரை .அதன் மீது கம்பீரமாய் அமர்ந்துள்ள வீரன். போரில் இந்த வீரன் இறந்ததன் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நடுகல் எண் 9
ஒரு கையில் வாளும் ஒரு கையில் வில்லும் ஏந்தி எதிரில் உள்ள காளையின் மீனு அம்பு செலுத்தி உள்ளான் . பெரும்பாலும் காளையை கொள்வது போல் நடுகற்களில் காணப்படுவதில்லை இதில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது . இவன் காளையோடு சண்டையிட்டு அதை கொன்று தானும் இறந்திருக்கலாம் . இதற்காண காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை தெரிந்தால் தெரியப்படுத்தவும் .
அடுத்த நடுகல் எண் 10
குறுவாளுடன் ஒரு குதிரை வீரன் காட்டப்பட்டுள்ளான் . குதிரை முன்னங்கால் இரண்டையும் து◌ாக்கிக் கொண்டு காணப்படுகிறது அந்த காலுக்கு அடியில் ஒரு வீரன் கையில் கத்தியுடன் காட்டப்பட்டுள்ளான். குதிரை மீது இருந்தவன் போரில் வீரமரணம் அடைந்ததால் இந்த நடுகல் எடுக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த நடுகல் எண் 11
தாவும் நிலையில் குதிரை ஈட்டியை எய்யும் நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான் . இவன் போரில் வீரமரணம் அடைந்ததால் .இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது
இவன் இறந்ததால் மனைவி உடன்கட்டை எறி இறந்துள்ளார். எனவே இது சதிக்கல் ஆகும்
அடுத்த நடுகல் எண் 12
ஒருகையில் வாளும் , ஒருகையில் வில்லும் வைத்துள்ளான். இடையில் குறுவாள் காட்டப்பட்டுளளது . நெற்றியில் நாமம் உள்ளதால் வைணவத்தை சேர்ந்தவன் , புலியின் மார்பில் அம்பு தைத்துள்ளது . புலியோடு போராடி அதையும் கொன்று தானும் இறந்திருக்கலாம் அதன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்
அடுத்த நடுகல் எண் 13
இருப்பதிலேயே சிறிய நடுகல் இதுவாகும் கையில் வாளுடன் கைகளை கூப்பிய வண்ணம் காட்டப்பட்டுள்ளான்
அடுத்த நடுகல் எண் 14
வாளை கீழே ஊன்றியவாறு ஒரு வீரன் காட்டப்பட்டுள்ளான்
இது இந்த நடுகல் தொகுதியில் இருந்து 100 அடி து◌ாரத்தில் இருக்கின்றது. இவன் ஒரு தலைவன் ஆக இருக்கலாம் . அருகில் இருப்பவன் அதற்கான அடையாளத்துடன் நிற்கிறான். அருகில் உடன்கட்டை ஏறி இருப்பதை இது காட்டுகிறது.
சானாரப்பன் கோவில் எதிரே உள்ள மலை உச்சியில் இந்த குறியீடுகள் காணப்படுகிறது . இதில் சாய், இரட்டைவாய் கொடுவாள், பாண்டில் விளக்கு , சந்திரன் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. இந்த வீரர்கள் நினைவாக இந்த குறியீடுகள் வரையப்பட்டு அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் வீரமரணமடைந்த மார்கழி 27ல் மலை உச்சியில் விளக்கு ஏற்றப்படுகிறது இந்த கிராமத்தினரின் வழக்கமாக உள்ளது. அப்போது கோவிலில் நடுகல் சிலைகளை கழுவி மஞ்சள் , பொட்டிட்டு படையல்போட்டு கொண்டாடுகின்றனர்.
கடைசியாக ஒரு புலி காட்டப்பட்டுள்ளது அது புதிதாக வெட்டப்பட்டது
கருங்கல்லால் ஆன நாய் வடிவங்களும் அந்த நடுகல் வளாகத்தில் காணப்படுகின்றது.
இந்த கோவிலைச்சுற்றி ஒருகாலத்தில் மண்குதிரை பொம்மைகள் இருந்ததாக ஊர் பெரியவர்கள் கூறிவருகின்றனர். அதேப்போல் பெரும்பான்மையான நடுகற்களில் வில் பொரிக்கப்பட்டுள்ளது. அது அதியமானின் சின்னமாக கூட இருக்கலாம்
தொடர்பான காணொலிகள் #மயிலாடும்பாறை #தொகரப்பள்ளிக்காக உயிர்நீத்த வீரர்கள் மணியன் , ஏகாம்பரன், கும்பேற்கடைவேள்முததரையந்தேவர் இவர்களின் வீரமும் தியகமும் இன்றும் அவ்வூர் (தொகரப்பள்ளி) கொண்டாடுகிறது. மேலும் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்
https://youtu.be/BEkrjktO9Qg
part 1 காணத்தக்க கிருஷ்ணகிரி மரபு நடை 2 தொகரப்பள்ளி சானாரப்பன் நடுகல் கோவில் -கல்வெட்டு விளக்கம் ஒரு வரலாற்று சுற்றுலா ஏற்பாடு -கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்
#காணத்தக்ககிருஷ்ணகிரி#நடுகற்கள் #கல்வெட்டு #வீரம் #தமிழன் #அதியமான் #herostone
#kanathkakrishnagiri #பெருங்கற்காலம் #வரலாறு
#கிருஷ்ணகிரிமாவட்டம் #krishnagiri #krishnagirinews
#பெருங்கற்காலம் #prehistoric #prehistoric #khrdt
#history #musiem #tamilnadu #tamilnaduhistory #cultural
#நினைவிடம் #சுற்றுலா #tourism
https://youtu.be/EYXWTg81o2c
part 2 மாவட்ட ஆட்சியரின் காணத்தக்க கிருஷ்ணகிரி மரபு நடை 2 தொகரப்பள்ளி மலைர அடிவார நடுகல் -கல்வெட்டு விளக்கம் ஒரு வரலாற்று சுற்றுலா ஏற்பாடு -கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்
#காணத்தக்ககிருஷ்ணகிரி#நடுகற்கள் #கல்வெட்டு #வீரம் #தமிழன் #அதியமான் #herostone
#kanathkakrishnagiri #பெருங்கற்காலம் #வரலாறு
#கிருஷ்ணகிரிமாவட்டம் #krishnagiri #krishnagirinews
#பெருங்கற்காலம் #prehistoric #prehistoric #khrdt
#history #musiem #tamilnadu #tamilnaduhistory #cultural
#நினைவிடம் #சுற்றுலா #tourism
https://youtu.be/IughDVGGzos
https://maps.app.goo.gl/X4EwBeTVXjunJM2c9
12.447448530892412, 78.3390403807694
உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
தொகரப்பள்ளி அதியமானை எதிர்த்து போரிட்ட வீரர்களின் நடுகல் தொகுப்பு
https://youtu.be/O_iv6pArU2M


















































Comments
Post a Comment