மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்
பொ.ஆ.மு.1000லிருந்து பொ.ஆ.மு.500 கிருஷ்ணகிரியிலிருந்து 25 கி.மீ தொலைவில் கிருஷ்ணகிரியிலிருந்து – பீர்பள்ளி சாலையில் மல்லசந்திரம் எனும் மலையடிக் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ள மலை உச்சிப்பகுதி மோறல் பாறை என அழைக்கப்படுகின்றது. இங்கு முன்பு நூற்றுக்கணக்காண கல்திட்டைகள் காணப்பட்டுள்ளது. ஆனால் இன்று பெரும்பாலனா கல்திட்டைகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இருப்பினும் 30 க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் நல்ல நிலையில் உள்ளது. இங்குள்ள மக்கள், இக் கல்திட்டைகளில் பாண்டவர்கள் வனவாசம் வந்த போது தங்கியிருந்தனர் என நம்புகின்றனர். இங்கு கிடைக்கும் பாறைகள் தட்டையாக உடையும் தன்மையில் உள்ளதால் இவை கல்திட்டைகள் அமைப்பதற்கு ஏதுவாக உள்ளது. இங்குள்ள கல்திட்டைகள் சுமார் 3 அடி முதல் 6 அடி வரை உயரமாக உள்ளது. நான்கு கற்பலகைகள் செங்குத்தாக அமைத்து அதன் மேல் பலகைக் கல்லால் மூடப்படும். பெரும்பாலும் கிழக்குப்பக்கமாக இருக்கும் கற்பலகையில் நுழைவதற்கான துளை போடப்பட்டுள்ளது. இக் கல்திட்டைகளைச் சுற்றி கற்பலகைகள் வட்டமாக சுற்றுச் சுவர் போல பதிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இரண்டு வட்டமாக கற்சுவர்கள் எழுப்பியுள்ளனர். இங்குள்ள கல்திட்டைகள் சிலவற்றில் ஓவியங்கள் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கற்பலகையில் வரையப்பட்டுள்ளது. அதில் யானை வேட்டை, புலி வேட்டை, நடனக் காட்சிகள், மற்றும் சில குறியீடுகளும் காணப்படுகின்றன. சில ஓவியங்களில் விலங்குகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற காட்சிகள் உள்ளன. அவை சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் “ களிறு அடக்கல்” (யானையை அடக்குதல்) என்ற வார்த்தைக்கேற்ப அமைந்துள்ளது
மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவைகளாகும். இவை அடுத்தடுத்த இரண்டு பாறைப் பரப்புகளில் காணப்படுகின்றன. இங்கு ஏற்கனவே11 கல்திட்டைகளில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது இப்பாறைகளுக்கு எதிரே உள்ள மலைப்பகுதியில் புதிதாக பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், ப்ரகாஷ் ஆகியோர் கண்டறிந்து அளித்த தகவலின் பேரில் மத்திய பல்கலைக் கல்லூரி மாணவர்களுடன் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம். தொல்லியல் துறை, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவ்ணப்படுத்தும் குழுவினர் இணைந்து களப்பயணம் மேற்கொண்டனர். இது குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது.
இப்பாறை ஓவியம் வரையப்பட்டுள்ள பாறையை ஒரு கல் திட்டையோடு ஒப்பிடும் வண்ணம் இவ்வோவியம் கூரையில் இல்லாமல் செங்குத்துக்கல்லில் வரையப்பட்டுள்ளது. இதில் நிரப்பப்பட்ட பெருக்கல்குறி போன்ற உடலமைப்புடன் ஒரு மனித உருவம் இரு கைகளையும் தூக்கி இடுப்பில் கத்தியுடன் நடந்து செல்வதாகவும், அருகில் கோட்டுருவத்தில் ஒரு மனிதன் மாட்டை பிடித்துவருவது போலவும் வரையப்பட்டுள்ளது. பெருக்கல் குறி போன்ற உடலமைப்புக் கொண்ட ஓவியம் ஐகுந்தம் போன்ற பிற இடங்களிலும் செஞ்சாந்தில் வரையப்பட்டுள்ளன. இது புதியகற்கால மரபின் தொடர்ச்சியாகும். பின்னாளில் உருவான ஆநிரைமீட்டல் நடுகல் உருவத்தின் முன்னோடியாக இந்த பாறை ஓவியத்தைக் கூறலாம். சங்க இலக்கியங்கள் மாட்டை செல்வம் என்றும், கால்நடைகளுக்காக ஏராளமாக சண்டைகள் நடந்துள்ளதையும், அச்சண்டைகளில் இறந்த வீரர்களின் நினைவாக நடுகல் எடுக்கப்பட்டதையும் பதிவுசெய்துள்ளன. இத்தகைய இலக்கிய செய்திகளைத்தான் இப்பாறை ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன.. எனவே இப்பாறை ஓவியம் இப்பகுதியின் சமூக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த களப்பயணத்தின்போது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சதானந்த கிருஷ்ணகுமார், ப்ரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு
https://youtu.be/-JRLMHg5X0g
மாவட்ட ஆட்சியர்உடன் மல்லசந்திரம் 19.2.23 ( திரு ஜேகப் ) https://jsrkrishnaji.blogspot.com/2025/04/19223.html
நீங்கள் பார்க்காத #கோணத்தில் #மல்லசந்திரம் #கற்திட்டைகள் #கிருஷ்ணகிரி #பெருங்கற்கால #வரலாறு
#கிருஷ்ணகிரிமாவட்டம்
https://youtu.be/kFurGdNywqg
களப்பயணம் கடினமாக இருப்பினும் நமக்கு வரலாற்றினைப்பற்றிய தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் - மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பயணங்களை ஏற்படுத்தும் திரு. வெங்கடேஷ்வரன் அவர்களின் பணி சிறப்பானது அரசு கலைக் கல்லூரி M Aவரலாறு இரண்டாமண்டு மாணவர்கள் கள ஆய்வுப்பயணம் மல்லசந்திரம் https://youtu.be/2-VB4b4wSNw
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்திலேயே மிகப்பெரிய இறந்தவர்களுக்கான பாறை வெளியிலானா நினைவுச்சின்னங்கள் கொண்ட இடந்தி ஆய்வு மற்றும் வகுப்பு எப்போது இருந்து இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன . பேய்வராதிருக்க பெரியகல் வைக்கப்பட்டதா ? தற்போதய வழிபாட்டுக்கும் இதற்கும் உண்டான தொடர்பு என்ன ?
https://youtu.be/oSfv5ePXIM4
12.637083136224527, 78.09884362906996
https://maps.app.goo.gl/SZ659fsW1hMhy64S9












Comments
Post a Comment