புலிக்குத்திப்பட்டான் கல் ஆத்துகாவா - ராமிநாயனப்பள்ளி- கிருஷ்ணகிரி
11.08.2019 அன்று ஆய்வுக்காக நான்( தமிழ்செல்வன் ) ,வரலாற்று ஆசிரியர் ரவி, மாருதி மனோகரன் ஆகியோர் கல்லுகுறுக்கி ஆத்துக்காவா கால்வாய் ஓரம் சாமந்தமலை நோக்கி சென்றபோது வழியில் ராமிநாயனப்பள்ளி அனுமான் கோவிலின் பின் பக்கம் மூன்று நடுகற்களைப்பார்த்தோம் அதில் இரண்டு கவிழ்ந்த நிலையிலும் ஒன்று மட்டும் தெரியும் நிலையிலும் இருந்தது.
உடனே அதை சுத்தம் செய்து பார்த்தோம் மிக அழகிய சதிக்கல் ஊர் மக்களிடம் இதை பாதுகாக்கச்சொல்லி வந்தோம். அவர்களும் கோவிலை புணரமைப்பு செய்யும் போது எடுத்து வைப்பதாக கூறினார்கள்
ஆத்துக்கால்வாய் நடுகல் herostone- KRISHNAGIRI HISTORY -KHRDT
https://youtu.be/smo-lai3qwI
மீண்டும் 19.02.2020. அன்று சென்று பார்த்த போது மூன்று நடுகற்களும் எடுத்து ஆலமரத்தடியில் சிறப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து .
இந்த நடுகற்கள் விஜயநகரர் காலத்தில் செதுக்கப்பட்ட நடுகற்கள் ஆகும் .
கிராம மக்களால் வண்ணம் தீட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது. வீரன் வாள் மற்றும் வில்லோடு புலியோடு போராடும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கட்டாரியை புலியின் வாயில் குத்துவது போல் செதுக்கப்பட்டுள்ளது . அவனுடைய இரண்டு வேட்டை நாய்களும் புலியோடு போராடுகின்றன.
அணிகலன்கள் அனிந்து காணப்படுகிறது. இவன் புலியோடு போராடி புலியை கொன்று தானும் இறந்ததால் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது . இவரின் இரண்டு மனைவியரும் இவனோடு உடன்கட்டை ஏறியுள்ளனர் . ஆகவே இதை புலிக்குத்திப்பட்டான் கல் எனவும் சதிக்கல் எனவும் அழைக்கலாம். பகுதியின் வளத்தை குறிக்கும் வகையில் கிளிகள் காட்டப்பட்டுள்ளன
இரண்டாவது நடுகல் ஒரு சதிக்கல் ஆகும் ஊருக்காக நடந்த பூசலில் போராடி இறந்துள்ளான். ஒருகையில் வாளும் ஒருகையில் கடடாரியும் வைத்துள்ளான் . இடையில் ஒரு குறுவாள் காணப்படுகிறது. அவனோடு அவனின் இரண்டு மனைவியரும் உடன்கட்டை ஏறியுள்ளனர் வளத்தினை குறிக்கும் வகையில் கிளிகள் காட்டப்பட்டுள்ளன
மூன்றாவது நடுகல் ஒரு சதிக்கல் ஆகும் ஊருக்காக நடந்த பூசலில் போராடி இறந்துள்ளான். ஒருகையில் வாளும் ஒருகையில் கடடாரியும் வைத்துள்ளான் . இடையில் ஒரு குறுவாள் காணப்படுகிறது. அவனோடு அவனின் இரண்டு மனைவியரும் உடன்கட்டை ஏறியுள்ளனர் . வளத்தினை குறிக்கும் வகையில் கிளிகள் காட்டப்பட்டுள்ளன
2 வருடங்களுக்கு முன் மண்ணில் புதையுண்டு இருந்த மூன்று நடுகற்களையும் ராமிநாயனப்பள்ளி ஊர் மக்கள் கோவில் முன் எடுத்து வைத்து பாதுகாத்திருப்பது பாராட்டுக்குறியது புலிகுத்திப்பட்டான் கல் சிறப்பு https://youtu.be/Z0vHjVuz_3Y
https://maps.app.goo.gl/NRJuqmFun8bGzffr9
உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு












Comments
Post a Comment