சோழ மன்னன் ராஜாதிராஜனின் கிபி.1050 தூம்பு கல்வெட்டு - கொங்கணப்பள்ளி வேப்பனப்பள்ளி ஒன்றியம்

கொங்கனப்பள்ளி தூம்புக் கல்வெட்டு இடம்;;: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பளியை அடுத்த கொங்கனப்பள்ளிக் கருகில் உள்ள நாயக்கன் ஏரியில் உள்ளது காலம்: முதலாம் ராஜாதிராஜனின் 32ம் ஆட்சியாண்டு (பொ.ஆ.1050) செய்தி: முதலாம் ராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜனின் 32ம் ஆட்சியாண்டில் அம்மன்னனே இந்த ஏரியை வெட்டி தூம்பினையும் நட்டு அதனை பராமரிக்க முதல் மடையில் 50 குழி நிலத்தையும் விட்ட செய்தியை இத்தூம்புக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இம்மன்னன் பொ.ஆ. 1052-ல் கொப்பத்தில் நடந்த போரின்போது யானையின் மேலிருந்து போரிட்டு இறந்ததால் இவன் யானைமேல் துஞ்சிய ராஜாதிராஜன் என அழைக்கப்பட்டான். தமிழகத்தில் சுமார் 100 தூம்புக் கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள முதலாவது தூம்புக் கல்வெட்டு இதுவாகும். மேலும் தமிழகத்திலேயே தூம்புக் கல்வெட்டில் ஒரு மன்னனின் மெய்கீர்த்தி முழுவதுமாய் எழுதப்பட்டுள்ளது இங்குதான். ஒரு மன்னனே தூம்பு அமைத்துக்கொடுத்த செய்தியும் அரிதான ஒன்றே. தூம்பு, மடை, குமிழி என்றெல்லாம் அழைக்கப்படும் அமைப்பானது ஏரியிலிருந்து தேவையான நேரத்தில் நீரை கால்வாய் வழியாக திறந்துவிட ஏற்படுத்தப்பட்ட சதுரத் தொட்டி மற்றும் இரண்டு கற்தூண்கள், இரண்டு குறுக்கு பலகைக் கற்கள் மற்றும் அவற்றின் மையத்தில் துளையிட்டு செறுகப்பட்டுள்ள மரக்கட்டை ஆகியவை சேர்ந்த அமைப்பாகும். பெரும்பாலும் தொட்டி கல்லாலேயே கட்டப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள தொட்டியானது செங்கற்களால் சுண்ணாம்புக்காரைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் எப்படியோ இந்த தூம்பு கல்லில் ஒன்று கீழே விழந்துள்ளது. அதை எடுத்து நிறுத்த ஆவணசெய்தல் வேண்டும்.
https://youtu.be/XG-na8uemJQ
#தூம்புக் கல்வெட்டில் #ராஜாதிராஜனின் #மெய்கீர்த்திமுழுவதுமாய் #கிருஷ்ணகிரிமாவட்டம் கல்வெடுடுகள்
https://youtu.be/0IXVuClt8X8
சோழன் தூக்கி நிறுத்திய (கிபி.1050 ) தூம்பு -ஆயிரம் ஆண்டு வரலாறு நிறுத்தி பாதுகாக்க வேண்டும் – KHRDT https://youtu.be/ypw9cGUn2x8
https://maps.app.goo.gl/8dQWrS2prqURYnED8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்