குந்தாணி அரசின் தலைநகர் தேவர்குந்தானி (சின்ன கொத்தூர்) சிவன் கோயில்
சின்னகொத்தூர் சிவன் கோயில்
குந்தாணி என்று போசளர் காலத்தில் அழைக்கப்பட்ட ஊர் தற்போது சின்னக்கொத்தூர் என்று அழைக்கப்படுகிறது. சின்னகொத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் ஹலேகுந்தாணி என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கு முன்னதாக குந்தாணியம்மன் என்னும் நிசும்பசூதனிக்கு கோயில் எழுப்பப் பட்டு பின்னர் போசளர் காலத்தில் அக்குந்தாணியம்மன் சிலையை கொண்டுவந்து இங்கு நிர்மானித்து கோயில் கட்டியுள்ளனர். குந்தாணியம்மன் கோயிலை ஒட்டியே திருவேகம்பமுடையநாயனார் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலே விஜயநகரர் காலத்தில் கைலாயமுடையார் என்று அழைக்கப்பட்டது. குந்தாணியம்மன் கோயிலுக்கு அருகிலேயே இருந்ததால் தற்போது அழைக்கப்படும் குந்தீஸ்வரர் என்னும் பெயர் அண்மைக் காலத்தில் தோன்றியிருக்கலாம். குந்தீஸ்வரர் கோயில் பிற்கால சோழர் கலையமைதியில் கிழக்குநோக்கிய கருவரை, அந்தராளம், அர்த மண்டபம் மற்றும் முகமண்டபம் ஆகியவற்றோடு கட்டப்பட்டுள்ளது. கருவரையையும் அர்த, முகமண்டபங்களை பிரிப்பதாய் அந்தராளம் இருபக்கமும் நுழைவு வாயில்களைக் கொண்டு அமைந்துள்ளது. அதிட்டான பாத வர்கங்கள் அந்தராளத்தில் தொடரவில்லை. கருவரை கர்ணம், அகாரை, முகசாலை, அகாரை, மற்றும் கர்ணம் என 6 பத்திகளைக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. கர்ணத்தில் கர்ண பஞ்சரம் அகாரையில் கும்பலதா, முகசாலையில் கோஷ்ட பஞ்சரம் ஆகியவை மிகுந்த கலை அம்சங்களுடன் செய்யப்பட்டுள்ளது. அர்தமண்டபத்தின் மையத்தில் ஒரு கோஷ்ட பஞ்சரமும் முகமண்டபத்தின் மையத்தில் ஒரு கோஷ்ட பஞ்சரமும் உள்ளன. இவை யாவும் பிற்கால சோழரின் கட்டடக் கலை கூறுகளாகும். இவற்றை சுற்றி வெளிப்புறம் சுவர் கொண்டு மூடப்பட்ட நீராழிப்பத்தி மண்டபம் உள்ளது. இதன் தென்கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அழகிய தூண்களைக் கொண்ட நுழைவு மண்டபங்கள் இருந்து அழிந்துவிட்டன. இக்கோயிலில் இருந்த சிற்பங்களில் சண்டிகேசுவரர் மட்டுமே தற்போது உள்ளது. மேலும் விவரங்களுக்கு
சின்னகொத்தூரில் கோவிலுக்கு மேல் உள்ள 2 அடி மேல் தளத்தின் எடை கோவிலை சரியாக நிறுத்துகிறது
https://youtu.be/2tg6SJGCmKw
சின்னகொத்தூர் ஸ்ரீபதிநாயனார் கோவில் கல்வெட்டு காஞ்சிபுரத்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கு...
https://youtu.be/4MYXtyBaRu8
சின்னகொத்தூருக்கும் காஞ்சிபுரத்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் உள்ள சம்மந்தம் ?
https://youtu.be/wFsBah4iUnM
ஆச்சரியம் சின்னகொத்தூரை ஒரு பெண் ஆட்சி செய்தாரா? மாவட்டத்தில் இரண்டாவது பெண்ணுக்கான நடுகல்
https://youtu.be/fNjGLPU-2Eo
1000 ஆண்டுகள் பழமையான -மீண்டெழும் தேவர்குந்தாணி சிவன்கோயில் சின்னகொத்தூர்
https://youtu.be/Kv51VdW3900
நரசிங்கதேவனுக்கு படைத்துணையாய் சென்று போரில் இறந்த மாராழ்வானுக்கு எடுத்த நடுகல் -சின்னகொத்தூர்
https://youtu.be/lXOuRKDQ3lo
ஜெகதேவமல்லன் பூசலில் இறந்ததன் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் - சின்னகொத்தூர் வரலாற்றில் சேர்க்கப்படும் மேலும் ஒரு பக்கம்
https://youtu.be/qtpLP2RdQoM
சுதந்திர தினத்தில் தியாகம் பற்றி பேசுகிறோம் ஆனால் அதற்கு 400 வருடங்களுக்கு முன்பே தன் உணிரை தியாகம் செய்த ஓர் வீர மங்கை நமது தலைநகராம் தேவர்ந்தானியில் இருந்தருக்கிறார். அவர் பலியிடப்படுவதும் அதன் பின் தெய்வமாக வழிபட்டதற்கான ஆதாரங்கள் இன்னும் அங்கே
https://youtu.be/PWY4R3bxi5A
பெரும்பகுதி தமிழகத்தின் தலைநகராக இருந்த தேவர் குந்தானியில் மொத்தம் 5 பழமையான (700 ஆண்டுகள் ) கோவில்கள் இருக்கின்றன அவற்றில் ஒரு சிவன் கோவில் புணரமைக்கப்படுகிறது . பல்வேறு கல்வெட்டுகளை தன்னுள்ளே கொண்டுள்ள ...............
https://youtu.be/Tk8oTsqdL_g
https://maps.app.goo.gl/2VHeLn1ibQs4Y1iU6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு















Comments
Post a Comment