பெரியகோட்டப்பள்ளி - பாறை ஓவியங்களில் குறியீடுகள்

பெரியகோட்டப்பள்ளி பாறை ஓவியங்கள் பி.கே.பெத்தனப்பள்ளி ஊரின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறு குன்றின் மீது இரு பாறைகளுக்கு இடையே ஒன்றில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை குறியீடுகள் மற்றவை மனித மற்றும் விலங்கின் உருவங்கள். இப்பாறை ஓவியத்துக்கும் மலையாண்டஹள்ளி ஆண்டிமலை பாறை ஓவியத்துக்கும் தொடர்பு உள்ளது. அதிலும் குறியீடுகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. ஒரு சில குறியீடுகளை சிந்து சமவெளிக் குறியீடுகளோடும் சிலவற்றை தமிழியோடும் ஒப்பிடலாம். பல்வேறு குறியீடுகளுக்கிடையே தமிழி எழுத்துக்களைப் போன்ற குறியீடுகளும் காணப்படுகின்றன. பெரியகோட்டப்பள்ளி பாறை ஓவியத்தின் வலது பக்கத்திற்கும் இடது பக்கத்திற்கும் உள்ளவேறுபாடுகள் அவ்விரண்டும் வெவ்வேறு குழுவினரால் வரையப்பட்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. (குறிப்பாக இரண்டு இடங்களிலும் உள்ள வரிசையான 4 தமிழி எழுத்து குறியீடுகளை கம்சண் என்று வாசிக்கக் கூடியதாய் உள்ளது. ஒரு கூட்டல் குறி, அதன் வலதுமுனையில் அசோகன் பிராமி ம வைக் குறிக்கும் முடிச்சு போன்ற அமைப்பு ஆகிய இரண்டையு கம் என வாசிக்கலாம். அதனைத் தொடர்ந்து கானப்படும் தமிழி ச போன்ற குறியீடும் அதனைத் தொடர்ந்து ஆங்கில் எழுத்து கேபிடல் ஐ போன்றுள்ளது. ஆனால் இதில் மேலும் கீழும் படுக்கைக் கோடுகளுக்கு பதில் சுழிகள் உள்ளன. இந்த 4 குறியீடுகளும் வரிசையாக உள்ளது மட்டுமல்லாமல் இருவேறு இடங்களில் உள்ள குறியீடுகளிலும் இவைக் காணப்படுவது எளிதில் புறந்தள்ளக் கூடியதாய் இல்லை. மேலும் விவரங்களுக்கு
இந்த பாறைகளின் இடுக்கில் தான் பாறை ஓவியங்கள் உள்ளன
பாறை ஓவியங்களில் பிராமி சிந்துவெளிகுறியீடுகள் பெரியகோட்டப்பள்ளி பாறை ஓவியங்கள் ஆய்வு
https://youtu.be/68kXCg6vIBo
எழுத்துக்களின் முன்னோடி குறியீடுகள் - ஆய்வு நோக்கில் பெரியகோட்டப்பள்ளி பாறை ஓவியங்கள் https://youtu.be/aKp9lNtICEg
பாறை ஓவியங்களில் சிந்து வெளி குறியீடுகள் - ஆய்வு நோக்கில் பெரியகோட்டப்பள்ளி பாறைஓவியங்கள்
https://youtu.be/dYy_ToUg-nE
குறியீடுகளில் இருந்து எழுத்துக்கள் தோன்றியதா? ஆய்வு நோக்கில் பெரியகோட்டப்பள்ளி பாறை ஓவியங்கள் KHRDT
https://youtu.be/P838xTwqs9o
நூறு சதுரஅடிப்பரப்பில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் இரண்டு இனக்குழுக்களால் வரையப்பட்டு இருக்கலாம் . அவற்றின் வேறுபாடு தெளிவாக காட்டப்பட்டுள்ளது பெரியகோட்டப்பள்ளி பாறை ஓவியத்தில் காப்பாச்சியர் கோவிந்தராஜ் ,விஜயகுமார், இதை 2005ல் கண்டறிந்த முருகானந்தத்துடன் தமிழ்செல்வன்-MUSEUM&KHRDT
https://youtu.be/85DqMIH5iRA
பெரியகோட்டப்பள்ளியில் இருக்கும் பிருந்தாவணம் சுமார் 4.5 அடி உயரம் கொண்டது . கோவிலை அருமையாக நிர்வாகம் செய்கிறார்கள். வெளியூரில் இருந்து வந்தால் அவர்கள் 80 பேர் வரை தங்க அருமையான மண்டபம் கட்டியுள்ளார்கள். கோவிலின் அருகே சதுர வடிவில் அருமையான குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது (200 வருடம் ஆகியிருக்கலாம்) அதை து◌ார்வார ஊர் மக்கள் முடிவு செய்திருப்பதாக கூறினார்கள் .
https://youtu.be/HrZSdOS_tFg
கிருஷ்ணகிரி ஒன்றியம் பெரியகோட்டப்பள்ளி ஊரின் ஏரிக்கரை அருகே உள்ள பாறைகளின்மேல் ஒரு கண்ணாணிப்பு கோபுரம் காணப்படுகிறது இது நவாப் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது 200 ஆண்டுகளுக்கு முன்னர்
https://youtu.be/MBi825iCFcI
https://maps.app.goo.gl/gFbzaZXAgfMwKZ2PA
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்