பெத்ததாளாப்பள்ளி - பாறை ஓவியங்கள்
பெத்ததாளாப்பள்ளி
மனிதன் எழுத்தை அறிந்து கொள்வதற்கு முன்பு தன் எண்ணங்களை அவன் வாழ்ந்த குகைப்பகுதிகளில் ஓவியங்களாக வரைந்தான் அப்படி ஒரு இடம் தான் பெத்ததாளாப்பள்ளி மலை இந்த மலையை சுற்றி நீர்நிலைகள் காணப்படுகின்றன. அமாவாசை குண்டு. கோத்திகுண்டு, மலை உச்சியில் உள்ள பாறை, இருட்டுகுகை, பூமரத்துப்பள்ளம், மற்றும் 4 இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வரலாற்றுக் காலம் வரை உள்ள மனிதர்களால் வரையப்பட்ட வெண்சாந்து ஒவியங்களாகும். பொதுவாக ஒரு மலையில் ஒரு இடத்திலோ அல்லது இரண்டு இடத்திலோதான் பாறை ஓவியங்கள் காணப்படும் ஆனால் இங்கோ சுமார் 10 இடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மனித உருவங்களாகும். அவை சண்டையையோ நடனத்தையோ குறிப்பனவாகும். கோத்திகுண்டில் பறவைகள் வரையப்பட்டுள்ளன. இதே போல அருகில் உள்ள கிருஷ்ணகிரி மலையிலும் சுமர் 5 இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன
https://jsrkrishnaji.blogspot.com/2018/02/blog-post_17.html
தாளாப்பள்ளி மலையில் மேலும் ஒரு பாறை ஓவியத்தொகுதி 15.5.19 அன்று ஊர் மக்கள் மூலம் கண்டறியப்பட்டது (பூமரத்துப்பள்ளம்)
https://youtu.be/2RvN2SUtz_o
Rock painting in Thalapallai -By Museum Curator Mr.Govindaraj தாளாப்பள்ளி பாறை ஓவியம் KHRDT&MUSEUM
https://youtu.be/B2q8yWg8Ybc
தாளாப்பள்ளி அமாவாசை குண்டு பாறை ஓவியங்கள்
https://youtu.be/hL8pi2ZNKBg
தமிழ்ச்செல்வன், அவரது மகன், கிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாராயணமூர்த்தி, விஜயகுமார், பிரகாஷ், தினமணி ரவி, அருங்காட்சியக செல்வகுமார், என்னுடைய மகன் தினேஷ் மனோகரன், மருமகள் கீர்த்தி தினேஷ், இவர்களோடு மாருதி மனோகரன் ஆகிய நான் உள்பட 11 பேர் மலை அடிவாரம் சென்றடைந்தோம்.
https://youtu.be/rd-Rp856z5A
தாளாப்பள்ளி இருட்டுகுகை
https://youtu.be/sCO8yUPBAU8
கிருஷ்ணகிரி அணையை சுற்றி உள்ள பகுதி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் வாழவிடமாக இருந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் அங்கே உண்டு அந்தவகையில் பெத்ததாளாப்பள்ளி மலையும் மலைக்க வைக்கிறது அங்குள்ள பாறை ஓவியங்களில் அமாவசைகுண்டு என்ற இடத்தில் உள்ள 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியம் உங்களுக்காக ( கிருஷ்ணகிரி மாவட்ட பாறைஓவியங்கள் )
https://youtu.be/Uwa8JY16rHQ
மேநாள் ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்த காணத்தக்க கிருஷ்ணகிரிதிட்டத்தின் கீழ் அருங்காட்சியக பயிற்சிக்கு வந்த மாணவிகளுக்கு தாளாப்பள்ளி குகை பாறை ஓவியங்கள் காண பயணம் பர்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி & அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி –ஊத்தங்கரை
https://youtu.be/ApZQGpqiwj
236-ROCKART தாளாப்பள்ளி தினேஷ் குண்டு பாறைஓவியம் MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI
https://youtu.be/qDqcF0TL_5g
https://maps.app.goo.gl/bBaEdLJYG6iLSGp67
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு







Comments
Post a Comment