மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

பருகூர் அருகே உள்ள மல்லபாடி என்னும் கிராமத்தில் பழமையான வரலாற்று சிறப்புமிக்க 700 நூறு ஆண்டுகள் பழமையான சிவாலயம். சிவாலயத்தை ஆய்வு செய்து திருப்பணி செய்ய அந்த மக்களுக்கு ஆலோசனை வழங்கிய போது. மல்லப்பாடி சிவனீசுவர முடையார் சிவன் ஆலயம் | Mallappadi Sivaneeswara Mudayar Shiva Temple
https://youtu.be/2SXHezOPIG0
................
தமிழகத்திலேயே முதன் முதலாக கண்டறியப்பட்ட பாறை ஓவியம். ..
மல்லப்பாடியின் வரலாறு பெருங்கற்காலம் முதல் நாம் அறிந்து கொள்ளலாம். அதற்கு முன் இல்லையா என நீங்கள் கேட்கலாம் இருந்திருக்கும் நாம் ஆய்வு செய்த வகையில் தான் இதை கூறுகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திருப்பத்தூர் – பர்கூர் சாலையில் பர்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ.தொலைவில் மல்லபாடி எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்துக்குப் பின்னால் உள்ள மலை அடிவாரத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த ராமன், 1978 ஆம் ஆண்டு மற்றும். 1981-82 காலகட்டத்தில் தன்னுடைய முதல் அகழ்வாய்வுக்கு இந்த இடத்தினை தேர்வு செய்தது. அந்த ஆய்வின் போது தமிழத்திற்கு ஒரு புதிய செய்தி வெளியானது. ஆம் இங்குதான் தான் தமிழகத்தின் முதல் பாறை ஓவியம் கண்டறியப்பட்டு உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது. மலையின் கிழக்கு பக்கத்தில் உள்ள வண்ணான் கெவி என்னும் பறை குகையில் அந்த ஓவிங்கள் கண்டறியப்பட்டன. இங்கு குதிரையின் மீது அமர்ந்துள்ள இருவர் நீண்ட ஈட்டி போன்ற ஆயுதத்தால் ஒருவரை ஒருவர் தாக்க முனைவது போல உள்ளது. இங்கு உருவங்களை கோட்டோவியங்களாக வரைந்த பின்னர் உட்புறம் வெள்ளை வண்ணத்தால் நிரப்பியுள்ளனர். இவ்வோவியத்திற்கு மேலே வீரன் ஒருவன் கையில் இரும்பு வாளுடன் மற்றும் இடுப்பில் குறு வாளுடன் காட்டப்பட்டுள்ளான். குதிரை ஓவியத்துக்கு கீழே மாட்டின் உருவம் வரையப்பட்டுள்ளது. இங்கு நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த தொல்குடிகள் பயன்படுத்திய பொருட்கள் அதிக அளவிலும், குறைந்த அளவில் புதிய கற்கால பானை ஓடுகளும் கிடைத்தன. இங்கு கிடைத்தவற்றில் கருப்பு - சிவப்பு பானை ஓடுகள், கருப்பு பானை, சிவப்பு பானை மற்றும் சாம்பல் வண்ண பானைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். இவ்வோவியங்கள் பெருங்கற்காலத்தில் சுமார் கி.மு. 500 – கி.பி 300 வரையிலான காலகட்டங்களில் வரைந்திருக்ககூடும் என தமிழகத் தொல்லியல் துறையினர் கணிக்கின்றனர்..
Part 3 பையம்பள்ளி, மல்லப்பாடி -கிருஷ்ணகிரி மாவட்ட அகழாய்வுகள் காட்டும் கிருஷ்ணகிரி மாவட்டவரலாறு’’ -தொல்லியல் அலுவலர் பரந்தாமன்.
https://youtu.be/0gecSlPp_E4
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதிகப்படுத்தியது இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்திலேயே அதிய பாறை ஓவியங்களை கொண்ட ஒரு மாவட்டம் என்பதில் ஐயமில்லை
https://youtu.be/1vhva7762uI

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்