நக்கநாயனபண்டா -தமிழகத்தின்மிகப்பெரிய பாறைக்கீரல்

தமிழகத்தின் மிகப்பெரிய சுமார் 6 அடி உயரமுள்ள ஒரே வடிவிலான 3 பாறை கீரல்களும் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இக்கீறல் பாறையிலிருந்து 50 அடி தொலைவிலேயே பெருங்கற்படைக் காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்களும் கற்திட்டையும் காணப்படுவதால் இப் பெரிய பாறைக் கீறலின் காலத்தையும் பெருங்கற்படைக்காலம் என தீர்மானிக்கலாம். இக்கால ஒவியங்களில் உருவங்கள் ஒற்றை கோட்டால் வரையப்பட்டிருக்கும். ஆனால் இக்கீறல் உருவமோ இரட்டை கோட்டால் முழு உருவமாகவே குறைந்த ஆழத்தில் கீறப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 6 அடி உயரத்தில் உள்ள தாய் தெய்வத்தின் வடிவமாக இருக்கலாம். இரு புறம் சடையும் உடலின் அமைப்பு கத்திரிபோலவும் உள்ளது. தெய்வத்தின் இரு புறமும் இரு சிற்றுருவங்கள் வரையபப்பட்டுள்ளது .இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என அதன் அமைப்பினை வைத்து சொல்லலாம். தலையும் கழுத்தும் தனித்த இரு வட்டங்கள் இணைந்தது போலவும். உடல் அமைப்பு கத்திரிக் கோல் போன்ற அமைப்பிலும் வரையப்பட்டுள்ளது. மூன்றாவது பாறையில் உள்ள உருவம் இவை போன்றே இருந்தாலும் அது மிகவும் தேய்ந்து காணப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது இதுவே தமிழகத்தில் இதுவரை அறியப்பட்ட பாறைக்கீரல்களில் பெரியதாகவும் இருக்க கூடும். மேலும் விவரங்களுக்கு - https://www.khrdt.in/krishnagiri/nakkanayanapanda biggest human prehistoric petro clips in krishnagiri பெரிய மனித உருவ நக்க நாயனபென்டா பாறைக்கீரல்
https://youtu.be/qzPHiPFpZbM
https://jsrkrishnaji.blogspot.com/2019/11/75.html
5 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று மீண்டும் பார்க்க வேண்டிய ஆவல் அந்த - 4500 old bruising rock art ஆண்டுகள் பழமையான பாறை தேய்ப்பு ஓவியம் நக்கநாயனபண்டா - வேப்பனப்பள்ளி
https://youtu.be/fsb4eaOTBWQ
#Prehistoric #Petroglyphs, #பெருங்கற்கால #பாறைக்கீரல் #கிருஷ்ணகிரி #வேப்பனப்பள்ளி #நக்கநாயனபண்டா https://youtu.be/R7CIZ9Dt1xQ நக்கநாயணபண்டா பாறை ஓவியங்கள் . இதில் செஞ்சாந்து , வெண்சாந்து ஓவியங்கள் , பாறைக்கீரல்கள் ஆகிவை ஒரேபாறையில் வரையப்பட்டுள்ளன அதாவது 4500 வருடங்களுக்கு முற்பட்ட செஞ்சாந்து நிற ஓவியங்களும் , அதன் பின் சில காலகட்டங்களில் வரையப்பட்ட வெண்சாந்து ஓவியமும் காணப்படுகின்றன. இதில் சிந்துவெளி முத்திரையில் காணப்படும் காளையின் உருவத்தினை வெண்சாந்தில் வரைந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் மனித உருவங்கள், விலங்குகள் குறியீடுக்ள் ஆகியவை இதில் உள்ளன .
https://jsrkrishnaji.blogspot.com/2025/05/blog-post_5.html சதாநந்தகிருஷ்ணகுமாரின் கண்டறிதல் -நக்கநாயனபண்டா பாறைஓவியம் -4500 ஆண்டுகள் பழமையானது- https://youtu.be/ENZFtrXLeI0
நக்கநாயனபண்டா பாறை ஓவியங்கள் உடன் பாறை கீரல்கள் https://youtu.be/q_quE6g4zF8
நக்கநாயனபண்டா பாறை ஓவியங்கள் https://youtu.be/7AYNSTszbB4 12°45'03.6"N 78°13'01.2"E
https://maps.app.goo.gl/H2S2ZBcFNo79mCtJ8

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்