மதகொண்டப்பள்ளி -ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு - விஜயநகர கட்டிடக்கலை -

https://jsrkrishnaji.blogspot.com/2023/11/blog-post_48.html மதகொண்டப்பள்ளி முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இவ்வூர் குணநல்லூர் என அழைக்கப்பட்டிருப்பதும், இறைவன் குணநல்லூர் மகாதேவர் என அழைக்கப்பட்டதும் அக்காலத்திலேயே ஒருகல் மலையம்மன் என்ற பெயரில் காளி கோயில் இருந்ததும் இவ்வூரில் உள்ள தூண் கல்வெட்டு (பொ.ஆ.1018) மூலம் தெரியவருகிறது. சுமார் 250 ஆண்டுகள் கழித்து போசள மன்னன் வீர விஸ்வநாதன் காலத்தில் இந்த ஊர் மத்தகாமுண்டன்பள்ளி என்றும் இறைவன் திரு அங்கநாத ஈஸ்வரமுடைய நாயனார் என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயிலில் 4 கல்வெட்டுகள் உள்ளன. வழக்கமான கட்டடக்கலையோடு போசளர் கால சிவன் சன்னதியும் மிகுந்த வேலைப்பாடுகளோடு விஜயநகர் கால அம்மன் சன்னதியும் கட்டப்பட்டுள்ளன. முகமண்டபத்தில் அமையும் 4 தூண்களிலும் பல்வேறு விதமான புராண சிற்பங்களை அமைப்பது மல்லிகார்ஜுனதுர்க்கம் போன்ற இடங்களில் காணப்படும் போசளர் கால கலை அம்சமாகும். இங்கும் மிக நுணுக்கமான தூண் சிற்பங்களைக் காணலாம். 9 பெண் உருவங்களில் ஒரு யானை, 7 பெண்களில் குதிரை உருவம், 6 பெண்களில் யானைமீது மா, நான்கு குழந்தைளுக்கு இரண்டு கால்கள், இரண்டு முகம் நான்கு உடல்களைக்கொண்ட குரங்குகள், ரிஷபகுஞ்சரம் என்னும் யானை மற்றும் ரிஷபம் ஆகிய இரண்டு உடல்களுக்கும் ஒரே தலை, கண்ணப்பர், மார்கண்டேயர், விஷ்ணு, பாம்பு, சிலந்தி, யானை, மற்றும் புருசாமிருகம் ஆகியவை லிங்கங்களை வழிபடுவது ஆகியவை சிற்பக்கலை நுணுக்கங்களை வெளிப்படுத்துவனவாகும். இக்கோயில் வளாகத்தில் காணப்படும் மஹிசாசுர மர்த்தினி, துர்க்கை, சூரியன், சுப்பிரமணியர், சப்தமாதர்கள் ஆகிய சிற்பங்கள் 11ம் நூற்றாண்டு கலை அமைதியில் அமைந்தவை. தேபோல விஜய நகரர் கால கட்டிடக்கலைக்கு இம்மாவட்டத்தின் சிறந்த உதாரணமாக அம்மன் சன்னதியைக் குறிப்பிடலாம். இதில் அமைந்துள்ள கும்பலதா, கோஷ்ட பஞ்சரங்கள், கூடுகள் போன்றவை மிகுந்த வேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியை குணநல்லூர் என அழைக்கப்பட்டதற்கு ஆதாரமான முதலாம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டுகள் இவை
மதகொண்டப்பள்ளி பாப்பண்ணா அவர்களின் நிலத்தில் 950 வருடங்கள் பழமையன முதலாம் இராஜேந்திர சோழனின் 9வது ஆட்சியாண்டு - தூண் கல்வெட்டு உள்ளது சரியாக காலத்தை கணித்தால் கிபி 1021 காலத்திய கல்வெட்டு ஒத்தக்கல் மலை அம்மனுக்கு நித்தம் அமுதுபடிக்க கொடுத்த தானத்தை கூறுகிறது
https://youtu.be/WQgsSbdW7D0
1020 ல் வெட்டப்பட்ட #பொன்னியின்செல்வன் #ராஜராஜசோழன் மகன் #ராஜேந்திரசோழன் கல்வெட்டில் குணநல்லூர் மகாதேவர்கோவில் என்றும் அதன்பின் வந்த ஒய்சாளர்களின் காலத்தில் அவ்வூர்பெற்ற பெயர் மாற்றமும் அதற்கான காரணமும்
https://youtu.be/uDiFPAhWwq8
ஒத்தக்கல் மலையம்மன் என்ற பெயரில் காளி கோயில் இருந்ததும் இவ்வூரில் உள்ள தூண் கல்வெட்டு (பொ.ஆ.1018) மூலம் தெரியவருகிறது.அந்த அம்மனும் அந்த கோவிலும் மேலே காட்டப்பட்டுள்ளது .
முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இவ்வூர் குணநல்லூரின் ஒருகல் மலையம்மன் -மதகொண்டப்பள்ளி
https://youtu.be/HhbC3qPYR60
கோவிலின் பழமையை கூறும் சிலைகள்
நுழைவாயில்
விஜயநகர கட்டிடக்கலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நமக்கு தெரியாத பல பழமையான கோயில்கள் இருக்கின்றன அவற்றைன் கட்டிடக்கலை கண்ணை கட்டிபோட்டு விடுகிறது அந்தவகையில் மதகொண்டப்பள்ளி சிவன்கோவில் --கோயில் கட்டிடக்கலை காப்பாச்சியர் திரு கோவிந்தராஜ் #தளி #மதகொண்டப்பள்ளி #அர்க்கீஸ்வரர் #சிவன்கோவில்.
https://youtu.be/Uk4-A3_zoZU
#கிருஷ்ணரி மாவட்டம் #தளி - #மதகொண்டப்பள்ளி - #அத்தீஸ்வரர் கோவிலின் தெற்கு பக்க அதிஸ்டான குமுதகத்தில் உள்ள #வீரவிஸ்வநாததேவர் கல்வெட்டு படிக்கலாம் வாங்க
https://youtu.be/uC6onxRAKsE
#கிருஷ்ணரி மாவட்டம் #தளி - #மதகொண்டப்பள்ளி - #அத்தீஸ்வரர் கோவிலின் தெற்கு பக்க அதிஸ்டான குமுதகத்தில் உள்ள #வீரவிஸ்வநாததேவர் கல்வெட்டு படிக்கலாம் வாங்க
https://youtu.be/uC6onxRAKsE
பதிமுன்றாம் நு◌ாற்றாண்டின் ஒய்சாளர்களின் திருஅங்கநாதீஸ்வரநாயனார் கோவில் கல்வெட்டுகள் - மதகொண்டப்பள்ளி -கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
https://youtu.be/cO6ng8f_Bfw
https://maps.app.goo.gl/G8rJvz58MeV63fLm8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்