பேரிகையின் பேரழகி - சிற்ப்பக்கலை
விஜயநகர பேரரசை அரிஅரன் புக்கன் என்ற இரு சகோதரார்கள் தோற்றுவிக்கிறார்கள் அதில் ஒருவரான புக்கன் 1356-1377 வரை ஆட்சி செய்தான் அதில் 1371 ஆம் ஆண்டு இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது பேரிகை திருவத்திஸ்வரமுடைய நாயனார் என அப்போது இறைவன் அழைக்கப்பட்டுள்ளான் . வரிகளை கோவிலுக்கு செலவிட உத்தரவு இட்டதை கூறுகிறது. இந்த கோவிலின் அம்மன் சிலை ஒரேகல்லால் செய்யப்பட்டது மட்டுமல்ல பிரபாவளியும் அதே கல்லில் செய்யப்பட்டது மாவட்டத்திலேயே அழகிய அம்மனும் இதுதான்
ஹொய்சாளர்கள் மென் மைத் தன்மை கொண்ட மாவுக் கல்லில் மிகநுட்பமான வேலை பாடுகளுடன் கூடிய சிற்பங் களை பேலூர், அளபேடு போன்ற கோயில்களில் வடித்த, அதே காலத்தில், தமிழகத்தில் பிற்கால சோழர்களும், பாண்டி யர்களும் கருங்கல் சிற்பங்க ளைத் தங்கள் கோயில்களில் வடித்துள்ளனர்.
இந்த இரு பாணிகளையும் உள்வாங்கியே விஜயநகர மன் னர்கள், தங்களுக்கான கலைப் பாணியை உருவாக்கிக் கொண் டனர். அதாவது, கருங்கல்லில் மாவுக் கல்லைப் போன்று நுட்ப மான வேலையைக் காட்டுவதே அவர்களின் பாணி, விஜயநக ரர்கள் இந்தப் பாணியை தொடங்குவதற்கு முன்பே
பேரிகை சிவன் கோயிலிலுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பார்வதி சிலை.
ஹொய்சாளர்களுக்குக் கீழ் ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதியை ஆண்ட பூர்வாத ராயர்கள் இந் தப் பணியைத் தொடங்கி விட்டனர். இதற்கு உதாரண மாக, அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய பார்வதி சிலையை பேரிகை சிவன் கோயிலில் காணலாம்.
இந்த சிலை குறித்து ஆய்வு செய்த கிருஷ்ணகிரி அருங் காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், செவ்வாய்க்கி ழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம். சூளகிரி வட்டத்தில் உள்ள பேரிகை கைலாசநாதர் கோயி லில் உள்ள பார்வதி சிலை 700 ஆண்டுகளுக்கு முந்தையது. கருப்பு நிறத்திலான கருங்கல் லில், 4.5 அடி உயரத்தில் சிலை செதுக்கப்பட்டுள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் இந்தக்
கோயில் கட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழமையான கோயில்கள் பல இடிந்து போய் அங்குள்ள சிலைகள் காணாமல் போயின. கர்ப்பக் கிரகத்தின்கீழ் பகுதி புதையலுக்காக சமூக விரோதி களால் தோண்டப்படும் போது சிலைகள் மோசமாக சேதம் அடைந்தன இந்தச் சிலைக ளைக் கண்டறிந்த ஊர் மக்கள், சில கோயில்களை சரி செய்த தால் வழிபாட்டில் உள்ளன. ஆனால், இந்தக் கோயிலின் எந்தப் பகுதியும் சேதப்படுத்தப் படவில்லை. பார்வதி சன்னிதி மட்டும் மரம் வளர்ந்து இடிந்த தால், இடைக்காலத்தில் சீர மைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் காலத்தில் செய்யப் பட்ட அதே சிலை தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழிபாட்டில் உள்ள பழமை யான லிங்கமும், பார்வதி சிலை யும் இங்குதான் உள்ளன. இக் கோயிலின் 700 ஆண்டுக
ளுக்கு முந்தைய பெயரி 'திருவத்தீஸ்வரமுடைய நாய னார்' என்பதாகும். பார்வதி சிலைக்கு பின்னுள்ள பிரபா வளி என்ற பகுதியும் அதே கருங்கல்லினால் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. பார்வ திக்கு நான்கு கைகள் காணப்ப டுகின்றன. முன் வலதுகை அபய ஹஸ்தத்தையும், இடது கை வரத முத்திரையிலும் உள் என. பின் கைகளின் பாச அங் குசங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கருங்கல் சிற்பம் பார்ப்ப தற்கு தேரில் உள்ள மரச்சிற்பம் போன்று நுட்பமாய் செதுக்கப் பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயண மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, பேரிகையைச் சேர்ந்த ஆசிரியர் சன்னை பல் லப்பா ஆகியோர் உடனிருந்த னர் .





Comments
Post a Comment