சோழமன்னன் இரண்டாம் ராஜேந்திரன் காலத்திய கிருஷ்ணகிரி சோமேஷ்வர் கோவில்

பழையபேட்டை சோமீசுவரர் கோயில் இக்கோயில் கிருஷ்ணகிரியில் உள்ள பழமையான கோவிலாகும். இப்போது புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும் கோவிலில் இருந்த கல்வெட்டுகள் எடுத்து பாதுகாப்பாக புதிய கோவிலின் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளது. சோழமன்னன் இரண்டாம் ராஜேந்திரன் காலத்திய (பொ.ஆ. 1058) கல்வெட்டு, மற்றும் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் நடுகற்களில் கோவிலைக் கட்டியவர் குணமதாசர் என்பதும், அவரின் மனைவிகள் பெரியகாமவ்வை, சிறியகாமவ்வை மற்றும் குணமதாசரின் மகன் கங்கைகொண்ட சோழ பல்லவாதித்தன் என்பதும் தெரிய வருகிறது. இங்கு மொத்தம் 6 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலின் காலத்துக்கு முந்தய கன்னட கல்வெட்டு ஒன்றும் பாதுகாக்கப்படுகிறது. இது ஸ்ரீபுருசன் (பொ.ஆ. 800 ) காலத்தியது . கோவிலில் 980 வருடங்கள் பழமையான சந்திரன், சேத்திர அலமனெர், துர்க்கை போன்ற கற்சிற்பங்களை வழிபாட்டுக்கு வைத்துள்ளது சிறப்பு.
கோவிலின் நவகிரகங்கள்,கணபதி, கருவறை சுற்றி இருக்கும் கோஷ்ட தெய்வங்கள் தவிர மற்றவை அனைத்தும் 900 வருடங்கள் பழமையானதாகும்
மேல் உள்ளது கோவிலை கட்டிய குணமதாசர் 1060ல் குணமதீஸ்வரமுடையார் (சோமேஸ்வரர்) கோவில் பற்றிய பல அரிய வரலாற்றுத் தகவல்கள் -குணமதாசர் யார் ? கங்கை கொண்ட சோழப்பல்லவாதித்தன் யார் ?
https://youtu.be/0TinwfeJAh8
அவருடைய மகன் பல்லவாதித்தன்
குணமதாசர் அவர்களுடைய மனைவியர் பெரியகாமவை, சிறிய காமவை.
பைரவர்
இன்றும் வழிபாட்டில் உள்ள 900 வருடங்கள் பழமையான சிவலிங்கம் 964 ஆண்டுகள் பழமையான சோமேஷ்வரர்திருக்கோயில் மாவட்டத்தில் எங்கும் இல்லாத வகையில் நுழைவாயில் தயாராகிறது
https://youtu.be/85h-5mbX2Yo
விளக்கு ஏற்ற அனுமதி பெற்ற ஆணை - நெக்குந்தியில் இருப்பவர் கிருஷ்ணகிரி சோமேஷ்வரர் கோவிலில் அனுமதி காலம் கி.பி 11ம்நுநூற்றாண்டு - சித்திரமேழி நாட்டார் கல்வெட்டு
https://youtu.be/jDRmVKQ51Oo
பகுதி -1 கிருஷ்ணகிரியின் மிகபழமையான சிவன்கோவில் பழையபேட்டையில் உள்ள சோமேஷ்வரர் திருகோவில் அதனுடைய பழமையை அதன் கல்வெட்டுகள் கூறுகின்றன அதை கட்டியது யார் என்பதையும் நாம் தெரிந்து கொள்வோம்
https://youtu.be/zQr_pXqbCbE
பகுதி -2 சோமேஷ்வரர் கோவில் வரலாறு (கிருஷ்ணகிரி ) சிவன் தன் மனைவிக்கு தன் உடலின் சரிபாதி தந்தான் அந்தவகையில் கோவிலை கட்டிய குணபதாசரின் இரு மனைவிகளின் சிலைகளும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கோவில் வளகத்தில் வைக்கப்பட்டுள்ளது 950 ஆண்டுகளுக்கு முன்பே
https://youtu.be/eIQsnng2oMY
3.கங்கை கொண்ட சோழபல்லவாதித்தன் இவனுக்கும் இந்த சோமேஷ்வரர் கோவிலுக்கும் என்ன தொடர்பு . இவன் யாருடையமகன் ?
https://youtu.be/4pN3Tlb_9o8
கோபுரம் - கோயில் கட்டிடக்கலை - சிந்துவெளி கோபுரத்திற்கும் தமிழக கோபுரங்களுக்கும் உள்ள தொடர்பு -சோமேஷ்வரர் கோவில் கிருஷ்ணகிரி
https://youtu.be/3zotpqLnHWU
கங்கை கொண்ட சோழபல்லவாதித்தன் இவனுக்கும் இந்த சோமேஷ்வரர் கோவிலுக்கும் என்ன தொடர்பு . இவன் யாருடையமகன் ?
https://youtu.be/4pN3Tlb_9o8
சோமேஸ்வரர் திருக்கோயில்-கிருஷ்ணகிரி - 2ஆம் ராஜேந்திரன் கால கல்வெட்டுகள் பாதுகாக்கபட்டு-KHRDT &MUSEUM
https://youtu.be/vlAoNkttKYQ
இன்னும் சில கல்வெட்டுகள் கோவில் சுவற்றில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. செய்தி: இரண்டாம் ராஜேந்திரனின் மெய்கீர்;தியின் பகுதிகளோடு நெற்குந்தியிலிருக்கும் வேடன் பூவன் சிங்கனான சித்திரமேழி முத்தரையனின் மனைவியிடம் அதே ஊரைச் சேர்ந்த தட்டான் தவறாக நடந்து கொண்டான். இதனை விசாரிக்கும் சித்திரமேழ பெரிய நாட்டார் தட்டானுக்கு இங்குள்ள கோயிலுக்கு ஒரு நொந்தா விளக்கெரிக்க தண்டம் விதித்ததாக தெரிகிறது.
கோவிலின் பழைய படங்கள்
https://maps.app.goo.gl/AzWV9Cb2JBGbupa99

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்