பெண்ணேஸ்வரமடம் - முன்றாம் குலோத்துங்கச்சோழன் கட்டிய கோவில் - மொத்த கல்வெட்டுகளுடன் .

பெண்ணேஸ்வரமடம். தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரம் கம்பீரமாய் நிற்கின்றது பெண்ணை நாயனார் என்று கல்வெட்டுக்களில் அழைக்கப்பெறும் சிவன் கோயில். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (பொ.ஆ.1207) இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர், போசாளர், விஜயநகரர் காலத்தில் 30 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை இந்த கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானங்களை பற்றி கூறுகின்றது. மூன்றாம் ராஜராஜனின் பட்டத்து அரசி கொடுத்த தானக் கல்வெட்டு புலிச்சின்னத்துடன் தொடங்குகிறது. தமிழகத்தில் இங்கு மற்றும் ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் ஆகிய 2 இடங்களில் மட்டுமே புலிச்சின்னம் கல்வெட்டுடன் உள்ளது. போசள மன்னன் வீரராமநாதன் காலத்து கல்வெட்டு ஒன்று பெண்ணையாண்டார்மடத்திலோ அல்லது இக்கோயிலுக்கு சொந்தமான தேவதான ஊர்களிலோ அதிகாரிகள் எவரேனும் சோறுவேண்டுதல் அல்லது எதேனுமொரு நலிவுகள் செய்தால் அவர்களது தலையை அறுத்துவிடவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. மேலும் சென்னையின் பழைய பெயரான மதராசபட்டணம் என்பதின் உண்மையான பெயரான மாதரசப்பட்டணம் என்னும் பெயர் கொண்ட பொ.ஆ.1369ல் பொறிக்கப்பட்ட விஜயநகரர் கால கல்வெட்டு இக் கோயிலை அடுத்த மலையில் உள்ள ஒரு பாறையில் காணப்படுகிறது. இக்கோயில் மற்றும் மலையைச் சுற்றிலும் ஏராளமான நடுகற்கள், குறிப்பாக நவகண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.
கணபதி
மகிஷாசுரமர்த்தினி
தட்சிணாமூர்த்தி
பிரம்மா
லிங்கோத்பவர் இடத்தில் விஷ்ணு
பைரவர்
மூன்றாம் குலோத்துங்கச்சோழன் சிலை
இந்த சிலைகள் அனைத்தும் கோவில் கட்டிய மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தியவை
கோவிலின் கருவறையைச் சுற்றி கல்வெடடுகள் காணப்படுகின்றன. இவை தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் என்ற புத்தகத்தில் உள்ளது.
சோழபட்டத்து அரசி கொடுத்த தானம். புலிச்சின்னத்தோடு
https://www.youtube.com/watch?v=iAdh0Y3ikZo
கோவிலில் பிச்சை எடுத்தால் தலையை வெட்டு - கிருஷ்ணகிரி குந்தானியை தலைநகராக கொண்டு அரசாண்ட வீரராமநான் (1254-1295) அரசர் ஆணை அது பெண்ணையாண்டார் கோவிலில் உள்ளது -கல்வெட்டு ஆதாரத்துடன் - கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் .
https://youtu.be/AQu1DVN__rI
பாகம் -2 800 ஆண்டுகள் பழமையான பெண்ணைநாயினார் - பார்வதி திருக்கல்யாணம் - 1.1.23 பெண்ணேஷ்வர மடம் -கிருஷ்ணகிரி
https://youtu.be/xHYkBgR4EvU
800 ஆண்டுகள் பழமையான பெண்ணைநாயினார் - பார்வதி திருக்கல்யாணம் - 1.1.23 பெண்ணேஷ்வர மடம் -கிருஷ்ணகிரி புகழ்பெற்ற பென்னேஸ்வர மடம் கோவிலின் முன் இசையால் புகழ்பெற்றவனுக்கு ஒரு நடுகல் இருக்கும் மேலும் சிறப்பு . (இந்தநடுகல்லில்இருப்பதுஇருவரும்பெண்கள்எனகூறுவோரும்உண்டு எதுவாகிறும் அவர்கள் இசையில் வல்லவர்கள் ) https://youtu.be/YGL__0RuPYo
https://youtu.be/9fhXpZ8vv54
தமிழகத்திலேயேசோழர்களின்புலிச்சின்னம்உள்ளஒரேஇடம் -முன்றாம்குலோத்துங்கன்காலபெண்ணைநாயினார்திருகோயில் - 1206 முதல் 18 ஆம்நூற்றாண்டுவரைமொத்தம் 34 கல்வெட்டுகள்https://youtu.be/wBolU-aKDiU https://maps.app.goo.gl/xzMAK7EAQqYCyHUX8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

சாமந்தமலை -பெருங்கற்கால குத்துக்கல் Megalith - menhir

பிற்கால சோழர்கால நெடுசாலை -