தமிழகத்தின் பெரிய கருஞ்சாந்து ஓவியத் தொகுதி - கொங்கணப்பள்ளி வேப்பனப்பள்ளி ஒன்றியம்

கொங்கணப்பள்ளி கருஞ்சாந்து ஓவியம். எழுத்து வடிவம் வருவதற்கு முன் காட்டிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன் தன்னுடைய எண்ணங்களை வண்ணங்களைக் கொண்டு பாறை விதானங்களில் வரைந்து வைத்தான். பெரும்பாலான பாறை ஓவியங்கள் வெண்மை நிறத்திலும் மற்றவை செங்காவி நிறத்திலும் காணப்படும். கருஞ்சாந்து ஓவியங்கள் அறிதானதாகும். இவையும் வெண்சாந்து ஓவியக் காலமான பெருங்கற்படைக் காலத்தை சேர்ந்ததாக அறிஞர்கள் கூறுவர். அது போல் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இக்குகையின் விதானத்தில்கருமை நிறத்தில் ஓவியங்களை வரைந்து வைத்துள்ளான். நெற்றிப்பகுதியில் வெண்சாந்து ஓவியங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கருஞ்சாந்து ஓவியங்களில் மிகப்பெரிய ஓவியத் தொகுதி இதுவாகும் . இதில் மரங்கள் செடிகள் வரையப்பட்டுள்ளன. அதற்கிடையே ஒரு மனிதன் மண்டியிட்டு வணங்குவது போல் காட்டப்பட்டுள்ளது . அருகே ஒரு விலங்கும் காட்டப்பட்டுள்ளது. ஒரு வட்ட புதிர்நிலையும் பாம்பு ஒன்றின் உருவமும் இந்த ஓவியத்தொகுப்பில் காணப்படுகின்றது.
கொங்கனப்பள்ளி கருஞ்சாந்து ஓவியத்தில் வனத்தில் வழிபாடு செய்யும் ஓவியம்.
https://youtu.be/1TtGguKVY_E
கருஞ்சாந்து ஓவியத்தில் வட்ட புதிர்நிலை- கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள் -வே. கொங்கனப்பள்ளி
https://youtu.be/GBf6Oqp-DUE
மூன்று கால கட்டங்களில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் கொங்கனப்பள்ளி
https://youtu.be/Pi-jS0UGSyY
சதாநந்த கிருஷ்ணகுமார்& பிரகாஷ் கண்டறிதல் மீண்டும் வியக்க வைக்கிறது. இது பாறை ஓவிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும்
https://youtu.be/l7ElufbFhtw
கொங்கனப்பள்ளி பாறை ஓவியம் - கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள் (வேப்பனப்ள்ளி ஒன்றியம் ) KHRDT &Museum
https://youtu.be/fzjSngsSM4s
https://maps.app.goo.gl/BHGpB6m28aY5DWEJ8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்