Posts
Showing posts from May, 2025
பிற்கால சோழர்கால நெடுசாலை -
- Get link
- X
- Other Apps
நெடுசாலை: சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த ஊர் நெடுசாலை ஆகும். இவ்வூர் சோழ மன்னன் ராஜமகேந்கிரன் காலத்தில் கூடுமுக்கி என்று அழைக்கப்பட்டது. மூன்று ஆறுகள் இங்கு கூடுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் கூடுமுக்கி நிகளங்கீஸ்வரமுடைய நாயனார் என்றழைக்கப்பட்டது. பின்னர் நெடுந்தேவ நாயனார் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலில் மொத்தம் 12 கல்வெட்டுகள் உள்ளன. இதில் 6 கல்வெட்டுகள் பூர்வாதராயர்களின் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளில் இவர்களுக்குமேல் அரசாண்ட சோழர் அல்லது போசள மன்னர்களின் பெயர்கள் எதுவுமில்லாமல் இருப்பதால் அக்காலத்தில் இவர்கள் இப்பகுதியை தனித்தே ஆண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இக்கோயிலில் 3 அடி உயர ஆனந்த தாண்டவத்தில் உள்ள நடராசர் செப்புப்படிமம் புகழ் பெற்றதாகும். தன் வலது காலை முயலகன்மீது ஊன்றி இடது காலை குறுக்கே தூக்கி 4 கரங்களுடன் தன் வலது கரத்தில் அபயம் காட்டி தன் இடது கையை கஜ ஹஸ்தமாய் தூக்கிய திருவடியை சுட்டுவதாக வீசி, வலது இடது மேற்கரங்களில் முறையே உடுக்கை மற்றும் தீச்சுடரை ஏந்தியவாறு குமிழ் சிரிப்புடன் நடனமாடுகிறார். சிவகாமி, உமாசகிதர், சண்டிகேஸ...
ஆம்பள்ளி சமணர்சிற்பம் -13 ஆம் நூற்றாண்டில் ஆழ்வான்பள்ளி ஊரே தற்போதுள்ள ஆம்பள்ளியாகும்.
- Get link
- X
- Other Apps
பார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha) ( Pārśvanātha ) மகாவீர்ருக்கு முந்தைய சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார் இவர் கி. மு., 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர். பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா - ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர் முப்பது வயதில் உலக இன்பத்தை துறந்து துறவி ஆனார். பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார் தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார். பார்சுவநாதர் இவருடைய அடையாளம் தலைக்குமேல் குடையின் கீழ் பாம்பு படம் எடுத்தவாறு இருக்கும் ,இவர் நாடெங்கும் சமண சமயத்தைப் பரப்புவதில் பெரும்பங்காற்றியவர். வேத வேள்விச் சமயத்தாரின் தாக்குதல்களிலிருந்து இம்மதத்தைக் கட்டிக் காத்த பெருமையும் இவருக்கு உண்டு. நான்கு வக...
ஒட்டமார் கவி பாறை ஓவியங்கள்
- Get link
- X
- Other Apps
https://youtu.be/DA8heoTmcDQ ஒட்டமார் கவி பாறை ஓவியங்கள் தமிழகத்தில் பாறை ஓவியங்கள், பல்வேறு இடங்களிலும் காணப்படும் குகைச் சுவர்களிலும், பிற பாறையின் விதானப்பகுதி , குடைபோன்ற அமைப்புகளிலும் , மேற்பரப்புக்களிலும், தங்களுடைய எண்ணங்களை வெளியே சொல்ல எழுத்துக்கள் வழக்கத்தில் இல்லாத காலங்களில் தான் தங்கி ஓய்வெடுத்த இடங்களிலும் வழிபாடு செய்த இடங்களிலும் வெண்சாந்து மற்றும் சிவப்பு நிற ஓவியங்களை வரையத் தொடங்கினான் .இவை பழங்கால மனிதர்களால் வரையப்பட்ட தொன்மையான ஓவியங்களாகும் . அண்மைக் காலங்களில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்படும் பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டின் தொன்மையைக் குறிக்கும் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன. இது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலை ஈடுபாடு, சமூக வாழ்க்கை நடைமுறைகள் . வேட்டைக்கருவிகள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கான முக்கிய ஆவணங்களாக இவ்வோவியங்கள் விளங்குகின்றன. பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி பகுதியில் அதிகம் காணப்படுகின்றன அவ்வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இன்று சுண்டேகுப்பம் பஞ்சாயத்து மொட...