ஒட்டமார் கவி பாறை ஓவியங்கள்

https://youtu.be/DA8heoTmcDQ
ஒட்டமார் கவி பாறை ஓவியங்கள் தமிழகத்தில் பாறை ஓவியங்கள், பல்வேறு இடங்களிலும் காணப்படும் குகைச் சுவர்களிலும், பிற பாறையின் விதானப்பகுதி , குடைபோன்ற அமைப்புகளிலும் , மேற்பரப்புக்களிலும், தங்களுடைய எண்ணங்களை வெளியே சொல்ல எழுத்துக்கள் வழக்கத்தில் இல்லாத காலங்களில் தான் தங்கி ஓய்வெடுத்த இடங்களிலும் வழிபாடு செய்த இடங்களிலும் வெண்சாந்து மற்றும் சிவப்பு நிற ஓவியங்களை வரையத் தொடங்கினான் .இவை பழங்கால மனிதர்களால் வரையப்பட்ட தொன்மையான ஓவியங்களாகும் . அண்மைக் காலங்களில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்படும் பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டின் தொன்மையைக் குறிக்கும் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன. இது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலை ஈடுபாடு, சமூக வாழ்க்கை நடைமுறைகள் . வேட்டைக்கருவிகள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கான முக்கிய ஆவணங்களாக இவ்வோவியங்கள் விளங்குகின்றன. பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி பகுதியில் அதிகம் காணப்படுகின்றன அவ்வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இன்று சுண்டேகுப்பம் பஞ்சாயத்து மொட்டையன் கொட்டாய், கூசுக் கல் குட்டை என்ற இடத்தில ஒட்டமார் கவியில் இரு கற்களுக்கு இடையே கூறை போன்று 100 அடி நீளத்திலும் 20அடி அகலத்திலும காணப்படும் ஓரு பாறையின் அடிப்பகுதியில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளன. சில மங்கிய வகையில் காணப்படுகின்றன இவை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளும் அதற்கு பின்னர் வரையபட்டவைகளும் ஆகும். தெற்கு முனையில் வரையப்பட்ட ஓவியங்கள் தொடர் செய்தியை கூறுபவையாக இருக்கின்றன. ஒரு மனிதன் மையத்தை நோக்கி செல்வது போலவும் அவனை நோக்கி அம்பு செல்வதும் குறிக்கப்பட்டுள்ளன. இரண்டாவதில் அவனை பாடையில் சடங்கு செய்வது போல் சுற்றி மனிதர்கள் உள்ளது போல உள்ளது. மூன்றாவதில் இறந்த மனிதனை அலங்காரம் செய்த பாடையில் வைத்து து◌ாக்கி செல்வது போலவும் து◌ாக்கி செல்பவர்கள் ஒரே மாதிரி உடை அணிந்து உள்ளது போல் காட்டப்பட்டுள்ளது.
https://youtu.be/vkmge8kNAnI
அதன் அருகே ஒரு பெரிய உருவம் வரையப்பட்டுள்ளது. அது மனிதனும் பறவையும் கலந்த ஓர் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. அதுமட்டடுமல்லாமல் 30க்கும் மேற்பட்ட மனித உருவங்களும் 5 நட்சத்திர கோலவடிவங்களும் . மூன்று பாண்டில் விளக்குகளும் கேடயத்துடன் போரிடும் காட்சி ஒன்றும் வரையப்பட்டுள்ளது என அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்ட ஓவியங்களில் பறவைகள் காட்டப்பட்டுள்ளது சிறப்பானதாகும் . இங்கு அழகாக 3 இடங்களில் மயில் காட்டப்பட்டுள்ளது . ஒன்று ஓடி வருவது போல் காட்டப்பட்டுள்ளது. கொண்டை அலகுகள் . மயிற்பீலியும் காட்டப்பட்டுள்ளது போன்றவை தெளிவாக பாட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 இடங்களில் மயில் உருவங்கள் காட்டப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர் சுகவனம் முருகன் கூறினார் . இந்த ஆய்வுப்பயணத்திற்கு கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயனமூர்த்தி ஏற்பாடுகள் செய்திருந்தார் . பொருளாளர் விஜயகுமார் உடன் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் , ரவி ,விமலநாதன். பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் லட்சுமணன் , சக்திவேல் ,குமார் ,சிரிராம்.. ராமசாமி சத்தியராஜ் ஆகியோர் உடன் உதவினர்
https://maps.app.goo.gl/YRjcjZW3iJzgAbTE6

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

சாமந்தமலை -பெருங்கற்கால குத்துக்கல் Megalith - menhir

பிற்கால சோழர்கால நெடுசாலை -